உன்னால் முடியும் என்று எண்ணுவதையோ அல்லது முடியும் என்று கனவு காண்பதையோ துணிந்து தொடங்கு. உனது துணிவிலேயே அறிவும், ஆற்றலும், மந்திரமும் அடங்கியுள்ளன.
செய்ய முடியும் என்று நம்பு. ஒன்றைச் செய்ய முடியும் என்று நீ முழுதாய் நம்பும்போது, உன் மனம் அதைச் செய்து முடிக்கும் வழிகளைக் கண்டறியும். ஒரு காரியத்தில் வைக்கும் நம்பிக்கை, அந்தக் காரியத்தை முடிக்கும் வழியையும் காட்டுகிறது.
பலரும், தங்களது சூழ்நிலை சரியில்லை என்றே குறைப்பட்டுக் கொள்கிறார்கள். வெற்றியாளர்களோ எழுந்து, தங்களுக்கான சூழ்நிலையைத் தேடுகிறார்கள்; அத்தகைய சூழ்நிலை கிடைக்கவில்லையெனில், அவர்களே உருவாக்குகிறார்கள்.
நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது.
உன்னிடம் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணரும் வழி விடா முயற்சியும், தொடர்ந்த உழைப்புமே ஆகும்; வலிமையோ, புத்திசாலித்தனமோ அல்ல.
தங்களது இலட்சியத்தினை அடைவதற்கு முனைப்புடன் காத்திருக்கும் பன்னிரண்டாம் வகுப்பு, பதினொராம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவ மாணவியர்கள் அனைவரும் தங்களுடைய பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று, தங்களின் கனவினை நனவாக்கிக் கொள்ள நான் மனமாற வாழ்த்துகிறேன்.
விடாமுயற்சியே வெற்றிக் கோட்டையின் திறவுகோல்! வெற்றி நிச்சயம்!!